சிவகங்கை மாவட்டத்தில் கோவை பார்க் கல்வி குழுமத்தின் பொன்விழா ஆண்டில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா

இன்றைய மாணவர்களின் கலந்துரையாடல் சக மனிதர்களுடன் இருப்பதை விட டிஜிட்டல் கருவிகளுடனே இருக்கின்றது. இதைப் புரிந்து ஆசிரியர்கள் தக்கவாறு அவர்களை வழி நடத்த வேண்டும் என்று நீயா நானா புகழ் கோபிநாத் அறிவுறுத்தினார்.


சிவகங்கை: கோவை பார்க் கல்வி குழுமத்தின் பொன்விழா ஆண்டில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா சிவகங்கை மாவட்டத்தில் 25 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 200 ஆசிரியர்கள் இந்த விழாவில் நீயா நானா புகழ் கோபிநாத் கையால், பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி, தமிழ்ச்செம்மல், நல்லாசிரியர் பாஹிரத நாச்சியப்பன், வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், வழக்கறிஞர் தாமோதரகிருஷ்ணன் மற்றும் மன்னர் கல்வி குழுமங்களில் தலைவர் மகேஷ் துரை முன்னிலையில் தங்களது விருதுகளை பெற்றுக் கொண்டனர்.



இந்த விழாவில் முனைவர் கார்த்திகேயன், முதல்வர், தமிழ்நாடு பொறியியல் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் துரைசாமி, பார்க் கல்வி குழுமம், பார்க் கல்விக் குழுமத்தின் வரலாறு, இன்றைய செயல்பாடு மற்றும் சாதனைகள் பற்றி விரிவாக பேசினார்.

டாக்டர் அனுஷா ரவி, விருது பெரும் ஆசிரியர்களை பாராட்டி பேசி, தான் இந்த கல்வி சேவையில் நுழைந்ததற்கான காரணத்தை விரிவாக எடுத்துரைத்து, இளைய தலைமுறைக்கு நல்ல கல்வியையும் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் அமைத்து தருவதே தனது குறிக்கோள், லட்சியம் என்று தனது உரையில் கூறினார்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களை கௌரவித்த நீயா நானா புகழ் கோபிநாத், இன்று எனது ஆசிரியர் எனக்கு என்ன புதிதாக கற்றுக் கொடுக்கப் போகின்றார் என்று கேள்வியோடு உட்கார்ந்திருக்கின்றான். ஆகவே ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை தாங்கள் முதலில் கற்றுக் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களின் கலந்துரையாடல் சக மனிதர்களுடன் இருப்பதை விட டிஜிட்டல் கருவிகளுடனே இருக்கின்றது. இதைப் புரிந்து ஆசிரியர்கள் தக்கவாறு அவர்களை வழி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நேரத்திலே தனது பள்ளி வாழ்க்கையையும் தனது ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து நன்றி கூறினார்.

டாக்டர் குமரேசன், முதல்வர், பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, அவர்கள் நன்றியுரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...