ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்

அருளாளி பூப்பந்தை உருட்டி முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழகம் மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்ரவரி 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முக்கிய பூஜையான மயான பூஜை கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. முக்கிய விழாவான பக்தர்கள் தீ மிதித்து குண்டம் இறங்குதல் நிகழ்வு நேற்று காலை தொடங்கியது.

இதற்காக 41 அடி நீளமுள்ள குண்டம் தயார் செய்யப்பட்டு உப்பாற்றங்கரையில் இருந்து கோவில் அருளாளி உள்ளிட்ட முறைதாரர்கள் ஆபாரண பெட்டி, திரிசூலத்தை தாரை தப்பட்டை ஆபரண மேளதாளங்கள் முழங்க குண்டம் இறங்கும் இடத்துக்கு கொண்டு வந்தனர். அருளாளி பூப்பந்தை உருட்டி முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.



இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டனர். அம்மனை நினைத்து வேண்டுதல் வைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறி வருவதால் தொடர்ந்து விரதம் இருந்து குண்டம் இறங்கி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஆனைமலை திமுக நகர செயலாளர் டாக்டர் செந்தில், திமுக பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார், முனனாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...