உடுமலையில் புகழ்பெற்ற சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட முத்தையா பிள்ளை லே-அவுட் பகுதியில் அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர்கோவில் உள்ளது. கோவிலில் சக்தி விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்பிரமணியர், காலபைரவர், நவகிரகங்கள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.



கோவிலில் லட்சுமி நரசிம்மர், லிங்கோத்பவர் புதிதாக பிரதிஷ்டை செய்வது எனவும், புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பணிகள் நிறைவு பெற்ற பின் கும்பாபிஷேக விழா இன்று ஸ்ரீ இராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையில் காலை 9 மணிக்கு மேல் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது.

பின்னர் கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக வைபவமும், பின்னர் சக்தி விநாயகர், முருகப்பெருமான், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், கோதரிசனம், தீபாராதனை, ரக்ஷாபந்தன விசர்ஜனம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...