குழிப்பட்டி மலைகிராமத்தில் சொந்த செலவில் ரேஷன் கடை கட்டித்தந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன்

ரேஷன் கடை அமைக்கப்பட்டதையடுத்து, ரேஷன் பொருட்கள் அனைத்தும் மலைக்கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள், திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன. இங்கு குழிப்பட்டி, குருமலை, கோடந்தூர், தளிஞ்சி உள்ளிட்ட 18 மலை கிராமங்களில் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இப்பகுதியில் புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி வனத்துறை அதிகாரிகள் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இது இவர்களின் நீண்ட நாள் போராட்டமாகவே உள்ளது. 2006 மன உரிமைச் சட்டத்தை இப்பகுதியில் அமல்படுத்தி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மலை கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை செய்து பார்த்தும், இதுவரை செவி சாய்க்காமல் இருக்கும் வனத்துறை அதிகாரிகள். இந்த நிலையில் குழிப்பட்டி உள்ளிட்ட மலை கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க நகரப் பகுதிக்கு சுமார் 14 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை கடந்து வனப்பகுதியில் நடந்து வந்து பொருட்களை வாங்கிச் சென்று வந்தனர்.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடையை மலை கிராமத்தில் அமைத்து தர கோரிக்கை வைத்தனர். மலை கிராம மக்களின் அவல நிலையை கண்ட திமுக மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை மலை கிராமத்திலேயே கட்டிக் கொடுத்துள்ளார்.

இதனால் தற்போது ரேஷன் பொருட்கள் அனைத்தும் அங்கு கொண்டு செல்லப்பட்டு மலை கிராமத்திலேயே அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்களது நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு கண்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்கு மலை கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழக அரசு தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் சாலை உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து வரும் நிலையில் மீதமுள்ள அடிப்படைத் தேவைகளையும் விரைந்து செய்து கொடுத்து மலை கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...