கோனியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோவையில் வரும் புதன்கிழமை போக்குவரத்தில் மாற்றம்

பேரூரிலிருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகா் ரவுண்டானா, பேரூா் புறவழிச் சாலை, உக்கடம் வழியாக செல்லலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை நேற்று (பிப்.25) வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகா் ரவுண்டானா, பேரூா் புறவழிச் சாலை, உக்கடம் வழியாக செல்லலாம்.

வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூா் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூா் புறவழிச் சாலை, அசோக் நகா் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் சோதனைச் சவாடி, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூா் சாலையை அடைந்து செல்லலாம்.

மருதமலை, தடாகம் சாலையிலிருந்து காந்திபார்க், மூன்று கம்பம் தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதி வரும் பேருந்துகள் அனைத்தும் காந்திபார்க் வழியாக டி.பி. சாலை வந்து மெக்கிரிக்கா் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சண்முகா திரையரங்கு சாலை, தேவாங்கப்பேட்டை சாலை வழியாக அவிநாசி சாலை மேம்பாலத்தை அடைந்து செல்ல வேண்டும்.

மருதமலை, தடாகம் சாலையிலிருந்து லாலி சாலை, டி.பி. சாலை, மூன்று கம்பம், தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதி வரும் பேருந்துகள் அனைத்தும், டி.பி. சாலை, மேட்டுப்பாளையம் சாலை, காமராஜபுரம் சந்திப்பு, சண்முகா திரையரங்கம் சாலை, தேவாங்கப்பேட்டை சாலை வழியாக அவிநாசி சாலை மேம்பாலத்தை அடைந்து செல்ல வேண்டும்.

மருதமலை, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. மாற்றாக மருதமலை, தடாகம் சாலையிலிருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூா், ராமமூா்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி, அசோக் நகா் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

உக்கடத்திலிருந்து, ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் சாலை, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூா் புறவழிச் சாலை, அசோக் நகா் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் சோதனைச் சாவடி, சிவாலயா சந்திப்பு, ராமமூா்த்தி சாலை, சொக்கம்புதூா், பொன்னையராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம். சுக்கிரவாரப்பேட்டை சாலையிலிருந்து, தியாகி குமரன் வீதி வழியாக, ராஜ வீதிக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.

மேலும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் 28ஆம் தேதி காலை 8 மணிமுதல் இரவு 10 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது. தேரோட்டம் நடைபெறும் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி ஆகிய சாலைகளில் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

அதேபோல, கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவுக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பக்தா்கள், ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் மற்றும் கோனியம்மன் கோயில் எதிர்புறம் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தா்கள் உக்கடம் காவல் நிலையத்துக்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்துக்கு கீழே உள்ள காலியிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...