சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பக்கோதிபாளையம் கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் கிராமத்தில் சுமார் 250 மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வராததால் அதிக விலைக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் பொது மக்களின் கோரிக்கைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலி குடங்களுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சார் ஆட்சியரிடம் முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.

ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கோதிபாளையம் கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுவரைக்கும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...