கோவையில் காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சரவணம்பட்டி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பாலச்சந்தா், சாய்பாபா காலனி (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பிரேம் சுகுமார், செல்வபுரம் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் சுபாஷினி ஆகியோர் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.26) தெரிவித்துள்ளதாவது,

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பாலச்சந்தா், சாய்பாபா காலனி (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் பிரேம் சுகுமார், செல்வபுரம் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் சுபாஷினி, குனியமுத்தூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) கார்த்திகேயன், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளா் கருப்பசாமி ஆகியோர் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளா் அருள் பெருமாள், பீளமேடு காவல் நிலையத்தின் புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சுந்தராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விக்னேஷ், உக்கடம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

பீளமேடு காவல் நிலைய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜெயபாலன், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அருணாச்சலம், சுந்தராபுரம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

போத்தனூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் செல்வம், பெரிய கடைவீதி காவல் நிலைய உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சிங்காநல்லூா் காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் கஸ்தூரி, ராமநாதபுரம் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சோம சுந்தரம், சிங்காநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக (சட்டம் -ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.

சாய்பாபா காலனி காவல் நிலைய (சட்டம்- ஒழுங்கு) உதவி ஆய்வாளா் ஆனந்தகுமார், கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த நாகராஜ், துடியலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...