தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும்- பொள்ளாச்சியில் உள்ள கல்லூரி மாணவிகள் வேண்டுகோள்

மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதன் காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதால் போதை பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: புற்றுநோய் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் KM கேன்சர் மருத்துவமனை மற்றும் NGM கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப் பொருள் பயன்பாடு காரணமாக மாணவ, மாணவர்கள் தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். மேலும் மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதன் காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதால் போதை பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். NGM கல்லூரியில் தொடங்கிய பேரணி பாலக்காடு சாலை, மத்திய பேருந்து, நிலையம், கோவை சாலை, புதிய திட்ட சாலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக போதை ஒழிப்பு மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

போதை பழக்க வழக்கம் என்பது மிகவும் மோசமான செயல் அதைப் பின்பற்றாமல் இருப்பது நமது கையில் தான் உள்ளது. போதை பழக்க வழக்கங்களுக்கு கல்லூரி, பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அடிமையாக உள்ளனர். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே முதலில் போதை பொருள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் இது போன்ற செயல்களில் இருந்து விடுபட முடியும் மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...