டாலர் சிட்டி என்ற திருப்பூர் தற்போது வெறும் சிட்டியாக மாறிவிட்டது – பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி பேட்டி

மத்திய அரசு இதுவரை பாரத் ஆயில் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும் தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என்றும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அவர், திருப்பூர் போன்ற நகரங்களில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாததன் காரணமாக தொழில் செய்பவர்கள் எல்லாம் இப்பகுதிகளை விட்டு வெளியேறிவிட்டதால் வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. டாலர் சிட்டி என்ற திருப்பூர் தற்போது வெறும் சிட்டியாக மாறிவிட்டது.

மேலும் தென்னை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொப்பரையை பாரத் ஆயிலாக மாற்றி சந்தை படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இதுவரை பாரத் ஆயில் திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...