கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம்இன்று நடைபெற்றது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 20ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை ஒட்டி தினமும் பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் ஒன்பதாவது நாளான்று இன்று தேரோட்டம் நடைபெற்றது. இது ஒட்டி இன்று காலை நாலு மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருள் நடைபெற்றது.

பிறகுமதியம் 2 மணி அளவில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இந்த தேரோட்டத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

இதில் முக்கிய பெருமகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டன. கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கற்பகம் கல்லூரி வீதி, வைசால் வீதி, எம்பட்டி காலனி, உக்கடம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஆங்காங்கே பொதுமக்களுக்கு உணவு வகைகள், நீர் மோர் என பல வகைகள் கொடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல் முன்புறம் பள்ளிவாசலில் நிர்வாகிகள் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...