கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டில் திருட்டு

செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் அருகே மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை பீளமேடு போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பாபு ஜனார்த்தனன்(71). இவர் நேற்று முன்தினம் (பிப்.25) வீட்டை பூட்டிவிட்டு கடைவீதிக்கு சென்றார். அப்போது அவர் சாவியை வீட்டுக்கு வெளியே செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் அருகே மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு அலமாரியில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கு வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் காணவில்லை. சாவியை தேடி எடுத்து மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

இது குறித்து பாபு ஜனார்த்தனன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...