தாராபுரத்தில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கல்லூரியை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4609 சதுர மீட்டரில் 18 வகுப்பறைகள், 3 அறிவியல் ஆய்வகங்கள், 1 கணினி ஆய்வகம், 1 மைய நூலகம், 5 துறை சார் நூலகங்கள், 1 கருத்தரங்க அறை, மூன்று தளங்களிலும் மாணவ / மாணவியர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் சுத்திகரிப்பான் ஆகிய வசதிகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ்,ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர் மாவட்டத்தின் மிகவும் பழைமை வாய்ந்த நகரமான தாராபுரத்தை சுற்றியுள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்குவது எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இக்கல்லூரி இளங்கலை தமிழ் (B.A. Tamil), இளங்கலை ஆங்கிலம் (B.A.English). இளமறிவியல் கணிதம் (B.Sc Maths). இளமறிவியல் வேதியியல் (B.Sc Chemistry) மற்றும் இளங்கலை வணிகவியல் (B.Com) ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளுடன் 07.07.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.

கல்லூரி வளர்ச்சிக் குழு உதவியோடு தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்டு இக்கல்லூரியானது தற்காலிகமாக தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இக்கல்லூரியில் தற்போது முதலாமாண்டில் 173 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 173 மாணவர்களும் பயின்று வரும் நிலையில் இதில் 90% மாணவர்கள் முதல் பட்டதாரிகளாக உள்ளனர்.

இக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசால் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் 5-ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22.12.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது 4609 சதுர மீட்டரில் 18 வகுப்பறைகள், 3 அறிவியல் ஆய்வகங்கள், 1 கணினி ஆய்வகம், 1 மைய நூலகம், 5 துறை சார் நூலகங்கள், 1 கருத்தரங்க அறை, மூன்று தளங்களிலும் மாணவ / மாணவியர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் சுத்திகரிப்பான் ஆகிய வசதிகளுடன் ரூ.12.46 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தாராபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திருநாவுக்கரசு, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், முதல்வர் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாராபுரம்) பத்மாவதி, தாராபுரம் நகர் மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்குமார், உதவி பொறியாளர் பூபதி, மாணவ, மாணவியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரிதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...