வால்பாறையில் அருகே வாழை தோட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டவிரோதமாக விற்கப்படும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுகிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் காவல்துறையினர் முன்னிலையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுபோன்று கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...