நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய பரிசீலனை- பொள்ளாச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராபாளையம், தாத்தூர் உள்ளிட்ட பகுதியில் நோய் தாக்கிய தென்னை மரங்களை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: பொள்ளாச்சியில் தென்னை மரங்களில் பரவியுள்ள கேரளா வாடல் நோயால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரடியாக வந்து கள ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராபாளையம், தாத்தூர் உள்ளிட்ட பகுதியில் நோய் தாக்கிய தென்னை மரங்களை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இதுகுறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டிருந்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.,கேரளா வாடல் நோயால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும், பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் நோய் பரவலை கட்டுப்படுத்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாகவும், கேரளா வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்றும், நோயால் பாதிக்கபட்ட தென்னை மரங்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதால், தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பேசி இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய பரிசீலனையில் உள்ளது என்றும், உணவில் தேங்காய் எண்ணெய் உபயோகம் என்பது குறைவாக இருப்பதால் இதற்கான ஆய்வும் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தோட்டக்கலை துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...