கோவை கோனியம்மன் கோயில் தேர் திருவிழாவில் இந்துக்களின் தாகத்தை தீர்த்த இஸ்லாமியர்கள்

போத்தீஸ் துணிக்கடை எதிரே உள்ள அத்தார் ஜமாத் நிர்வாகிகள், கோனியம்மன் கோவில் தேர் செல்கின்ற பாதையில் பள்ளி வாசலில் நின்று பக்தர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.


கோவை: கோவையில் உள்ள ஆன்மீக தலங்களில் மிகவும் பிரபலமான ஆன்மீக தளம் கோவையை காக்கும் காவல் தெய்வம் கோனியம்மன் திருக்கோயில். இங்கு வருடம் தோறும் நடைபெறும் கோனியம்மன் கோயில் தேர் திருவிழா ஆன்மீக பக்தர்களால் பரவசமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. டவுன்ஹால் வீதி, ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் இந்து ஆன்மீக பக்தர்களால் இன்றைய தினம் நிரம்பி வழிந்தோடின.

இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தேரை பார்த்து வணங்கி வழிபட்டு பரவசமடைந்தனர். இந்த நிலையில் கொழுத்தும் வெயிலில் தேர் திருவிழாவில் பங்கேற்றிருக்கின்ற ஆன்மீக பக்தர்களுக்கு குளிர் பானம், தண்ணீர் தேவைப்படும். இந்த நிலையில் தேர் செல்லும் பாதையில் பக்தர்களுக்கு அண்ணதானம், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஆன்மீக அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் விநியோகம் செய்தனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை கோனியம்மன் தேர் திருவிழாவுக்கு வருகின்ற இந்து பக்தர்களின் தாகத்தை, இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டிலை தந்து தாகம் தீர்த்தனர். போத்தீஸ் துணிக்கடை எதிரே உள்ள அத்தார் ஜமாத் நிர்வாகிகள், தேர் செல்கின்ற பாதையில் பள்ளி வாசலில் பக்தர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் பாட்டில்களை தந்தனர்.

15 ஆண்டுகளாக இந்த நற்பணியை செய்து வருகின்ற இவர்கள், இன்று மட்டும் சுமார் 7,000 பாட்டில்களை விநியோகம் செய்தனர். மதங்கள் வேறாயினும், மனம் ஒன்று தானே என்பது போல, மதத்தால் வேறுபட்டிருந்தாலும், மனங்களால், இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடின்றி இவர்களின் செயல்பாடுகள் அமைந்தன.

இந்துக்களோ இஸ்லாமியர்களோ அனைவருமே தங்களின் சகோதரர்கள் என்று தெரிவித்திருக்கின்ற ஜமாஅத் நிர்வாகிகள், அனைவரும் சாதி மத பேதங்களென வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். எங்களுக்குள் சாதி மத வேத பாகுபாடு இல்லை என்பதுபோல, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில், வருடம் தோறும இந்துகளுக்கு தண்ணீர் தந்து தாகத்தை தீர்த்து வரும் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தொடர்ந்து இந்த திருப்பணியை செய்து வருகின்றனர்.

நிறமற்ற தண்ணீர் போல மத நல்லிணக்க பணிகள் தழைத்தோங்கி மதமற்ற, சாதி பாகுபாடற்ற மனித சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்பாக இருக்கின்றன. அதற்கு இது போன்ற மத நல்லிணக்க பணிகள் வேற்றுமையிலும், ஒற்றுமையுடன் நடைபெற வேண்டியது அவசியம் என்றால் அது மிகையல்ல.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...