கோவை ரயில் நிலையம் லங்கா கார் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தி

கழிவுநீர் வெளியேறி பிரச்சனை ஏற்படும்போதும் தூய்மை பணியாளர்களை வைத்து தற்கால தீர்வு காண்பதில் மட்டுமே கோவை மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் சந்திப்பு லங்கா கார்னர் அருகில் சாலையில் கழிவுநீர் குழாய் அடைபட்டதால் சாலைகளில் பெருக்கெடுத்து கழிவுநீர் ஓடுகிறது. இதனால் ரயில் நிலையம் வரும் பயணிகளும், சாலையின் பயணிக்கும் வாகன ஓட்டுகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

குறிப்பாக இந்த சாலையில் அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் அரசின் வரிப்பணம் வீணாகி தொடர்ந்து இது போன்ற அவலம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்போதும் தூய்மை பணியாளர்களை வைத்து தற்கால தீர்வு காண்பதில் மட்டுமே கோவை மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் தற்போது தான் இந்த சாலையில் பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் தொடர்ந்து நடைபெறும் இது போன்ற அவலங்கள் நடப்பது கோவை மாநகராட்சியின் அலட்சியமும் கோவை மாநகராட்சியின் மெத்தனப் போக்குமே இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு காரணம் என்று அப்பகுதிமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.



மேலும் இந்த சாலையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதி என்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதனால் அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தொற்று நோய் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால் கோவை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...