கோவையில் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 'கலைஞர்' விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி வழங்கவுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா அரங்கத்தில், இன்று (29.02.2024) 'நான் முதல்வன்' திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் பணி நியமன ஆணைகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.



இதை தொடர்ந்து, நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு (Mentorship Portal), நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான 'கல்லூரி கனவு', முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சிகள் ஆகியவற்றை அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

அதை தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 'கலைஞர்' விளையாட்டு உபகரணங்களை வழங்கவுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...