கோவையை வஞ்சிக்கும் ரயில்வே துறை என பல்வேறு அரசியல் கட்சியினர் கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பிரசுரங்கள் விநியோகம்

தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட பல்வேறு கட்சியினர், கோவை இரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் பிரசுரங்கள் வழங்கி தென்னக ரயில்வேயின் அறிவிப்பை எடுத்துரைத்தனர். 7ம் தேதி மாட்டு வண்டியில் சென்று மனு கொடுக்கும் போராட்டம் குறித்தும் மக்களிடையே அவர்கள் தெரிவித்தனர்.


கோவை: வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.



இந்த அறிவிப்பிற்கு கோவையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசித்து, வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ஆறு ரயில்களை கோவை வழியாக இயக்க வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க அறிவித்திருந்தனர்.



இதன் முதற்கட்டமாக இன்று (பிப்.29) கோவை இரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் பிரசுரங்கள் வழங்கி தென்னக ரயில்வேயின் அறிவிப்பை எடுத்துரைத்தனர். மேலும் 7ம் தேதி மாட்டு வண்டியில் சென்று மனு கொடுக்கும் போராட்டம் குறித்தும் மக்களிடையே தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...