கோவை கொடிசியாவில் கல்லூரி கனவு 2024 திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

கோவையில் 178 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5.12 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (பிப்.29) வழங்கினார்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (பிப்.29) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற வழிகாட்டலை வழங்க ‘கல்லூரிக் கனவு 2024’ திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



உயர் கல்விக்கு வழிகாட்டுகின்ற கையேட்டை வெளியிட்டு அதனை மாணவர்களிடம் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பல முன்னணிநிறுவனங்களில் உயர் பொறுப்பில் உள்ள தமிழர்களின் வழிகாட்டுதலை நம் இளைஞர்களுக்கு வழங்கிடும் வகையில் naanmudhalvanmentors.com எனும் இணையதள சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்கிற ஆயுதம்’ என்கிற வகையில், இந்திய ஒன்றியத்திலேயே கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வறுமையோ, பொருளாதார சூழலோ நம் மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, நம்முடைய சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மூலம் கல்விக்கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தாண்டில், சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.1016 கோடி அளவுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1956 கோடி அளவுக்கு கல்விக்கடன் உதவிகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.



இந்த நிலையில், கோவையில் 178 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5.12 கோடி மதிப்பிலானகல்விக் கடனுதவிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (பிப்.29) வழங்கினார்.



கல்விக்கடன் பெறும் மாணவர்கள் ஈடுபாட்டோடு படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தினார்.



கோவை மாவட்டத்தில் உள்ள, 4 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த 622 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணைகள் - ஏ.டி.எம் கார்டுகளை இன்று (பிப்.29) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.



மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கின்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தையும் இன்று கோவையில் தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...