தாராபுரம் உடுமலை சாலையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து இரு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

ஆத்திக்களம் பிரிவை அடுத்துள்ள சரவணா நகரில் சாமிநாதன் என்பவரின் வீட்டில் 20000 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை ஆத்திக்களம் பிரிவில் வசித்து வருபவர் காளிதாஸ் (40) இவர் தனியாக தொழில் செய்து வருகிறார்.

நேற்று குடும்பத்தினர் பகலில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.



பின்பு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய், 30-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் முப்பதாயிரம் மதிப்புள்ள எல்.சி.டி டிவியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.



இதேபோல், காளிதாஸ் வீடு தாராபுரம் உடுமலை மெயின் ரோட்டில் உள்ளதால் பெரிய டிவியை கழட்டி மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல் ஆத்திக்களம் பிரிவை அடுத்துள்ள சரவணா நகரை சேர்ந்த சாமிநாதன் (63) இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.நேற்று பகலில் பள்ளி வாகனம் ஓட்டுவதற்காக சாமிநாதன் சென்று விட்டார்.

மனைவி தனலட்சுமி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 20000-ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2-சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பட்டப் பகலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருட்டு சம்பவம் நடைபெற்ற இரண்டு இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அலங்கியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...