வெள்ளிப்பாளையம் கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை

குருசாமி தோட்டத்துக்குள் புகுந்து தொழுவத்தில் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை சிறுத்தை கடித்து குதறியுள்ளது. சிறுத்தை கடித்து குதறியதில் கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.


கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு பகுதியையொட்டி வெள்ளிப்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு விவசாய தொழில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சென்னாமலை கரடு அடிவாரப் பகுதியில் விவசாயி குருசாமி என்பவர் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது தோட்டத்தில் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.28) இரவு தோட்டத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் ஒரு வயது இளம் கன்று குட்டியை கட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இரவு சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சென்னாமலைக்கரடு வழியாக குருசாமி தோட்டத்துக்குள் புகுந்து தொழுவத்தில் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை கடித்து குதறியுள்ளது. கன்றின் அலறல் சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பார்த்த போது சிறுத்தை கன்று குட்டியை கடித்து குதறிக் கொண்டிருந்தது. சிறுத்தை கடித்து குதறியதில் கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.



உடனே வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போடவே சிறுத்தை கன்று குட்டியை அங்கேயே போட்டு விட்டு வனப்பகுதிக்குள் தப்பியோடியது. பின்னர் குருசாமி வீட்டில் சிறுத்தை அங்கும் இங்கும் நடமாடிய காட்சி அவரது வீட்டில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறுத்தையின் நடமாட்டம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சமடைந்த கிராம மக்கள் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மேற்பார்வையில் நேற்று (பிப்.29) வனப்பணியாளர்கள் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு மரக்கடங்கு வளாகத்தில் இருந்து கூண்டை கொண்டு சென்று குருசாமி தோட்டத்திற்கு அருகில் சென்னாமலை கரடு அடிவாரப் பகுதியில் கூண்டை வைத்து இலை தழைகளால் கூண்டு வெளியே தெரியாவண்ணம் மூடி மறைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...