முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊதுபத்தி தீயில் ஸ்டாலின் உருவம் - கோவை கலைஞர் அசத்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ விமர்சனங்களை கடந்து சூரியன் போல் மக்களுக்காக உழைத்து வருவதாகவும், அதனை எடுத்துரைக்கும் விதமாகவே இரண்டு மணி நேரம் செலவழித்து நெருப்பு ஓவியத்தை வரைந்து உள்ளதாக கலைஞர் ராஜா தெரிவித்தார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் இன்று (மார்ச்.1) கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா ஊதிபத்தியை எரியவிட்டு அதனைக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், மு.க.ஸ்டாலின் எத்தனையோ விமர்சனங்களை கடந்து சூரியன் போல் மக்களுக்காக உழைத்து வருவதாகவும், அதனை எடுத்துரைக்கும் விதமாகவே இரண்டு மணி நேரம் செலவழித்து இந்த நெருப்பு ஓவியத்தை வரைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...