வரும் 4ம் தேதி திமுக அரசை கண்டித்து கோவை, செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - அம்மன் கே.அர்ஜுனன் MLA அறிவிப்பு

திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும் விடியா தி.மு.க அரசை கண்டித்து வருகின்ற (04.03.2024) அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் நேற்று (பிப்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில், திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும், போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும் விடியா தி.மு.க அரசை கண்டித்து மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி, சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற (04.03.2024) அன்று திங்கட்கிழமை காலை 09.30 மணி அளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் முன்பு முன்னாள் அமைச்சர், கழக தலைமை நிலைய செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி கொறடா S.P.வேலுமணி MA, MPhill, MLA கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...