பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம்

அதிமுக ஆட்சியில் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் வாழவே போராட வேண்டியுள்ளது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 5 முக்கு மற்றும் டேங்க் ரோடு ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு அதிமுக நகர செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகர செயலாளர் குருந்தாசலம், வீரபாண்டி நகர செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை, அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.



தொடர்ந்து அவர் பேசும்போது, அதிமுக ஆட்சியில் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் வாழவே போராட வேண்டியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-வை வெற்றி பெற செய்து பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யாரை கை காட்டுகிறாரோ அவரை இந்தியாவின் பிரதமராக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், பேச்சாளர் அசோக், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், தீபிகா, ரங்கசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், குணசேகரன், முருகேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...