ஒப்பணக்கார வீதியில் கூடிய விரைவில் பெலிக்கன் சிக்னல் - மாநகர காவல் ஆணையர் தகவல்

ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர்கள் வெயில் காலத்தில் சிரமமின்றி பணி புரிவதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய, டிராபிக் பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த பூத்தில் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையாளர், கோவை மாநகரில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பெலிக்கன் சிக்னல்களை பொருத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



அதன் தொடர்ச்சியாக இந்த பூத் அமைத்துக் கொடுத்த பிரகாஷ் ஏஜென்சி செந்தில்குமார் மேலாளர் ஒத்துழைப்போடு ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கூடிய விரைவில் ஒப்பணக்கார வீதி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெலிகன் சிக்னல்களை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இது போன்ற குளிர்சாதன வசதி உடைய பூத்துகள் தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...