உடுமலை அருகே கிராமப்புறங்களில் நாய் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்- அரசு மருத்துவமனையில் அனுமதி

பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பொதுமக்களை அப்பகுதிகளில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் தற்பொழுது பாதிக்கப்பட்ட அனைவரும் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...