சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் புகையிலை விற்பனை செய்த பெண் கைது

சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்துவந்த குழந்தைராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் 893 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு நேற்று (பிப்.29) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பைக்கில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் பெண் ஒருவர் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் கோவை பீளமேட்டை சேர்ந்த மனோரஞ்சிதம், 38 என்பது தெரிந்தது.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் காரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மறைத்து வைத்திருந்த குழந்தைராஜூ என்பவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் தப்பினார். பின் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார், 893 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...