சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டராக ஏஐசி ரைஸ் தேர்வு - நிதி மற்றும் பரிசினை வழங்கினார் அமைச்சர் டி.எம்.அன்பரசு

சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கிய நிதி மற்றும் பரிசினை, ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



சென்னை: ஸ்டார்அப் தமிழ்நாடு அமைப்பானது மாநிலம் முழுவதும் சிறந்த இன்குபேட்டர்களை அங்கீகரிக்க நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்குபேட்டர்களுக்கு நிதியினை வழங்கி கௌரவித்தது. இதில் சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் வரிசையில் ஏஐசி ரைஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கான நிதி மற்றும் பரிசினை தமிழ்நாட்டின் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கினார். இதில் ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் நிதியினைப் பெற்றனர். இந்நிதியானது ஏஐசி ரைஸின் உள்கட்டமைப்பு மற்றும் ஏஐசி ரைஸின் ஸ்டார்ட்அப்களின் மேலாண்மைக்காக பயன்படுத்தப்படும் என ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இயக்கனர் சிவராஜ் இராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...