கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு

நாட்டில் தற்போது நிலவும் சூழல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு சவால் விடும் வகையிலும், மக்களாட்சிக்கு எதிராக எதேச்சதிகாரப் போக்கில் நாடு சென்று கொண்டிருக்கும் பேராபத்தில் இருக்கிறது என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் மாநில தலைவர் மௌலவி ஹனீபா தெரிவித்தார்.


கோவை: வேற்றுமையில் ஒற்றுமை கொண்டாடும் இந்திய திருநாட்டில் மக்களின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 75 வருடங்களாக பாடுபட்டு வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மக்களின் தேர்தல் அறிக்கை 2024 யை தமிழா ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வெளியிடுகிறது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சமூக சமய வேறுபாடுகளின்றி நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை அடிபடையாக கொண்டு நாடுமுழுவதும் "மக்களின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு நாட்டு மக்களிடம் விவாதப்பொருளாக முன்னெடுத்துள்ளது.



அதன் ஒரு பகுதியாக கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பா 2024 -மக்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் மௌலவி ஹனீபா, நாட்டில் தற்போது நிலவும் சூழல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு சவால் விடும் வகையிலும், மக்களாட்சிக்கு எதிராக எதேச்சதிகாரப் போக்கில் நாடு சென்று கொண்டிருக்கும் பேராபத்தில் இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் சாதகமான சூழ்நிலையில் வரலாற்றின் போக்கையே மாற்றியமைக்கின்ற சக்தி நிறைந்த இந்தத் தருணத்தில் மதவாதம் கொண்ட தீய சக்திகள் நம்முடைய நாட்டைக் கவ்விப்பிடித்துக் கொண்டுள்ளன.

பொருளாதார சமத்துவமின்மை உச்சத்தில் இருப்பதோடு மட்டுமின்றி நாளுக்கு நாள் அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எதேச்சதிகாரமும், பொருளாதார சமத்துவமின்மையும் நாட்டில் வறுமை, வெறுப்பு, ஊழல் வன்முறை, போதைக் கலாச்சாரம் போன்றவை தலைவிரித்தாட காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலை மாறிட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கவனமாக தேர்தெடுக்கப்பட வேண்டியவர்கள். எனவே தான் உலக அளவில் நமது இந்திய பாராளுமன்றத்துக்கு இருக்கும் மாண்பினைக் காக்கும் திட்டங்களை முன்வைத்து ஏற்றத் தாழ்வின்றி மக்கள் மன்றத்தில் குரல் கொடுக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இந்த மக்கள் தேர்தல் அறிக்கையை முன்வைக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "மக்கள் நல அரசு, நீதியும் பாதுகாப்பும், வேளாண்மை, அதிகாரப் பகிர்வு, ஊழல் ஒழிப்பு, சமூகம், கல்வி, பெண்கள், வெளியுறவுக் கொள்கை, பொருளியல் 67 601 அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எதிர்நோக்கிய ஒரு தேர்தல் அறிக்கையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தற்போது வெளியிட்டுள்ளது.

கோவை போன்ற வளர்ந்துவரும் மாநகரில் வெறுப்பில்லாத ஒற்றுமை உணர்வோடு அனைவருக்குமான வளர்ச்சி முக்கியமானது இத்தகைய வளர்ச்சியை தற்போது வெளியிடப்பட்டுள்ள மக்களின் தேர்தல் அறிக்கை 2024 வலியுறுத்துகிறது. இத்தேர்தல் அறிக்கையை அங்கீகரித்து, கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு வழங்கும் என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...