காரமடை பகுதியில் கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சட்ட விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த சிஜோ ஜான்(39) என்பவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த‌ கேரளா மாநிலத்தை சேர்ந்த சிஜோ ஜான்(39) என்பவரை கடந்த மாதம் 14ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இன்று (மார்ச்.1) உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த சிஜோ ஜான்(39)-யை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...