கோவை வரதராஜபுரத்தில் பிரிமியர் மில்ஸ் குழுமம் சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் காந்தி நூற்றாண்டு நினைவு பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா

காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் ஒரு பள்ளி கட்டிடத்தை பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகள் கட்டி கொடுத்துள்ளது. கோயம்புத்தூர் சரக டிஐஜி சரவண சுந்தர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


கோவை: ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகள், சமூக மேம்பாட்டிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் புகழ்பெற்று விளங்குகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் சரக டிஐஜி, சரவண சுந்தர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பிரிமியர் மில்ஸ் குழும இயக்குனர் கவிதா காந்தி, நினைவு நூற்றாண்டு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சிவகுமார், பிரிமியர் மில்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் ஜெகதீஷ் சந்திரன், இயக்குநர்கள் சபிதா சந்திரன், டாக்டர். கே.வி. ஸ்ரீனிவாசன்,சாந்தி சீனிவாசன்,கவிதா சந்திரன், ஆதித்ய சீனிவாசன், பொது மேலாளர் (மனிதவள மேம்பாடு) என். சுரேஷ் குமார், நிறுவனங்களின் மூத்த நிர்வாகப் பணியாளர்கள், காந்தி ஸ்மரக் நிதி நிர்வாகப் பணியாளர்கள், சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...