கோவையில் தென்னையில் வாடல் நோய் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கள ஆய்வு

தென்னையில் வாடல் நோய் கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் தென்னையில் வாடல் நோய் பரவலாக தாக்கி தேங்காய் உற்பத்தியை பெருமளவில் பாதித்துள்ளது.



இது குறித்து தகவல் சேகரிக்கவும் இந்த நோயை கட்டுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிவிக்கவும் கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய மூன்று வட்டாரங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயிகள் மற்றும் அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இன்று முதல் மூன்று நாட்கள் (மார்ச் 01-03, 2024) கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.



இந்த கள ஆய்வில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், வேளாண் அலுவலர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த கள ஆய்விற்காக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இன்று (01.03.2024) பூசனைகோந்தள்ளி, குளத்துபுதூர் மற்றும் சோமந்துறை கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் கண்டு கலந்துரையாடினார்.



இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்களின் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்களைச் சேகரித்து ஆய்வறிக்கை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...