கிணத்துக்கடவில் கார் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் - காவல்துறை விசாரணை

அரசம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார். அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


கோவை: உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று இரவு கோவையில் நோயாளியை இறக்கிவிட்டு மீண்டும் உடுமலைப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார்.



அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது.



இதில் ஆம்புலன்ஸ் மற்றும் காரும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து மளமளவென எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸில் பற்றிய எரிந்த தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த ஓட்டுநர்கள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...