அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து

பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர் கற்பகம் உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வாய்ப்பாடு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம், 1-வது வட்டக் கழக திமுக சார்பாக அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் வட்ட கழக செயலாளர் ப.இராஜசேகரன் தலைமையில் கழக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.



தொடர்ந்து அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர் கற்பகம் உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் அங்கு பயின்று வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வாய்ப்பாடு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண தொகுப்புகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



முன்னதாக பள்ளிக் குழந்தைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினர். மேலும் இன்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர் கற்பகம் முதல் சேர்க்கையை தொடங்கி வைத்து மாணவருக்கு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், பகுதி கழக நிர்வாகிகள் இராக்கிமுத்து, சண்முகசுந்தரம், சன்சோமு, தன்ராஜ், வட்ட கழக நிர்வாகிகள் அன்பழகன், உதயகுமார், உதயகுமார் (LPF) , சின்னச்சாமி, வெங்கடேஷ், சேது, பெள்ளிராஜ், ஜெயக்குமார், லிங்கசாமி, சின்னு, பிரகாஷ், ராஜ்கண்ணன், சாம்ராஜ், கனகு, சுலோச்சனா இளைஞரணியை சார்ந்த இம்ரான், சுபாஷ்கண்ணன், யஷ்வந்த், மற்றும் பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியை பெருமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...