கோவை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (மார்ச் 3) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கோயில்கள், டோல்கேட், பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1088 கிராமப்புற மையங்கள், 497 நகா்ப்புற மையங்கள் என மொத்தம் 1,585 மையங்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து நாளை (மார்ச் 3) வழங்கப்படவுள்ளது.

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இம்முகாம்களுக்குத் தேவையான சொட்டு மருந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. இப்பணியில் சுகாதாரத் துறையினா், அங்கன்வாடிப் பணியாளா்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னார்வலா்கள் ஈடுபடவுள்ளனா். அரசால் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து தரமானது, பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றதாகும்.

எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...