சின்னதடாகம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற செய்ய அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.


கோவை: தமிழகம் முழுவதும் அ.இ.அ.திமுகவினர் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை சின்னதடாகம் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவனூர் துரைசாமி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் தர்மராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தரவு வடிவு ஆனந்தன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.



இதில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னிலை வைத்து சிறப்புரை ஆற்றினார்.



அப்போது அவர் பேசும் பொழுது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற செய்ய அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.



தொடர்ந்து 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் தலைமை கழக பேச்சாளர்கள் மணிமுரசு மற்றும் போதிச்சந்தர் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் வீரபாண்டி விஜயன், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், ஒன்றிய தலைவர் நர்மதா துரைசாமி, மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் தீபிகா சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஆனந்தன், நிர்வாகிகள் டி.ஆர்.என்.சுந்தரமூர்த்தி, டி.கே.டி.யுவராஜ், மயூர்குமார், வேலுசாமி, மளிகை செல்வராஜ், மாரிமுத்து, எஸ்.கே.சி.ஜெய்குமார், தேவராஜ், எம்.கே.எஸ்.கோபால், பார்த்திபன், அசோக்குமார், பொன்னுசாமி, மோகன்ராஜ், ராமச்சந்திரன், முருகன், ராமகிருஷ்ணன், சுதா நடராஜ், பிரபாகரன், மயில்சாமி, போலீஸ் வேலுசாமி, போலீஸ் சோமப்பன், கோவிந்தராஜ், குட்டை வழி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவை மண்டல தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் எம்.எஸ்.விக்னேஷ், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் துரைசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தடாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தடாகம் கிளைக்கழக முன்னோடிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...