போலி டாக்டர் பட்டம் பெற்றதாக மை வி3 ஏட்ஸ் நிறுவனத்தின் விநியோகர் விஜயராகவன் கைது

நேச்சுரோபதியில் பிஎச்டி பட்டம் பெறாமல் விஜயராகவன் ஹெர்பல் ப்ராடக்டுகளை சப்ளை செய்து வந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வடவள்ளியைச் சார்ந்த சக்தி ஆனந்தன் மை வி3 ஏட்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். இவரது நிறுவனத்தில் ஹெர்பள் ப்ராடக்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்கும் நுகர்வோர்கள் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை கடந்து பாலோவர்களாக மாறுகின்றனர்.

அவர்கள் அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என மை வி3 ஆப்ஸ் நிறுவனத்தார் தெரிவிக்க, 50 லட்சம் பேர் ஃபாலோவர்களாக ஃபாலோ செய்கின்றனர். இந்த நிறுவனத்தார் கோடிக்கணக்கில் மோசடிகளை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி ஆனந்தனை கைது செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்தி வரும் விசாரணையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தாருக்கு சித்துவா ஹெர்பல் தயாரிப்பு நிறுவனத்தினர், ஹெர்பல் ப்ராடக்டுகளை சப்ளை செய்து வருவது தெரியவந்தன. இது இதுகுறித்து நடந்த விசாரணையின் பொழுது விஜயராகவன் நேச்சுரோபதியில் பிஎச்டி பட்டம் பெற்றதாக தெரிவித்து சான்றிதழ்களை தந்திருக்கின்றார். இதனை சரிபார்க்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பல்கலைக்கழக சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது இது போலியானது என்பது தெரிய வந்தன. இதுகுறித்து கிரைம் நெம்பர் 13/24, 465 468 471, 420 ஐ.பி.சியில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த போலீசார், போலி டாக்டர் விஜயராகவனை மதுரையில் கைது செய்தனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட விஜயராகவனை சிட்டி கிரைம் பிரான்ச் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை போலி டாக்டர் விஜயராகவனை சிறையில் அடைக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

விஜயராகவன் நடத்திவரும் சித்துவா ஹெர்பல் கம்பெனி என்பதுக்கும் மேற்பட்ட ப்ராடக்டுகளை மை வி3 ஏட்ஸ் நிறுவனத்தாருக்கு தயாரித்து தந்திருக்கின்றனர். இந்த ஹெர்பல் ப்ராடக்டுகளை தயாரிக்கின்ற நிறுவனமான சித்துவா நிறுவனத்தின் உரிமையாளர் போலி டாக்டர் விஜயராகவன் என்பது தெரியவந்திருக்கின்றன. நுகர்வோர் பயன்படுத்திய ப்ராடக்டுகள் தரத்துடன் உள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றன. இது குறித்தி அடுத்தடுத்த விசாரணையில் விரிவாக தெரிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...