துடியலூர் ரயில் நிலையத்தில் சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை உடன் இணைந்து இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் சிறுதுளி அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.


கோவை: சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மார்ச் 2, 2024 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு துடியலூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்களுடன் நல்ல சூழலை உருவாக்கி வரும் ஐந்தாயிரம் மரங்கள் தவிர, சொட்டு நீர் பாசன முறை மற்றும் நடுத்தர கால பராமரிப்பு திட்டத்துடன் 6500 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை. உடன் இணைந்து இந்த இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.



காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 6500 மரக்கன்றுகளை நடுவதற்கு கோவையைச் சேர்ந்த மாணவர்களுடன், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தூய்மையான மற்றும் பசுமையான கோயம்புத்தூரை உருவாக்க பங்களிக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிறுதுளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...