வாலாங்குளம் பகுதியில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

தமிழகத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளுர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சுற்றுலாத்துறை சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வாலாங்குளம் பகுதியில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், இன்று (02.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போதுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,



தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் அனைத்துத்துறைகளிலும் பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் படி, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தமிழக சுற்றுலாத்துறையானது இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உள்ளுர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சுற்றுலாத்துறை சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலாங்குளம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பின்பு மாற்று இடத்தில் படகு இல்லமானது உரிய வாகனநிறுத்துமிடம் மற்றும் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார், செயற்பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சுற்றுலா அலுவலர் (LT) துர்காதேவி, குணசேகரன், மேலாளர் ராஜகுரு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...