மூன்று ஆண்டுகளாக வீட்டு வரியை வாங்காமல் வீரணம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக வடிவேல் என்பவர் புகார்

வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள். தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை. தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளனர் என்று வடிவேலு என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு தோட்டம் பகுதியில் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருபவர் வடிவேல்.

இவர் இறுதியாக 2020 - 2021 ஆம் ஆண்டில் வீரணம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் தனது வீட்டிற்கு வரி செலுத்தி உள்ளார். அதற்குப் பிறகு 2022,2023 தற்போது 2024 ஆகிய வருடங்களுக்கு வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்.



தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை.

தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக வடிவேலுவை அலைக்கழித்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வடிவில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் மனுவை கொடுத்துவிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் போன்ற அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

மேலும் தான் 2020-2021 ஆம் ஆண்டு வைத்திருக்கும் ரசீதில் உள்ள வரி விதிப்பு என்னை ஆன்லைனில் ஆய்வு செய்தால் அது பதிவாகவில்லை என வருகின்றது. இதனால் இங்கு வரி ஏய்ப்பு ஏதாவது நடந்திருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை முறையாக செலுத்தலாம் என மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத்தை நாடினால் என்னை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பி விடுகின்றனர் எனவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...