உடுமலை அருகே திருமூர்த்தி மலை அடிவாரத்தில் பொன்னாலம்மன் கோவில் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய திருமூர்த்தி மலை பகுதியில் பொன்னாலம்மன் சோலை உள்ளது. தளி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தோட்டத்து சாலைகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் மலை அடிவாரப் பகுதியில் பொன்னாலம்மனுக்கு கோவில் எழுப்பி காலம் காலமாக வழிபாடு வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. கோவிலில் பொன்னாலம்மன் பரிவார கடவுள்களான விநாயகர், முருகன், சப்த கன்னிகள், கருப்பராயனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.



கோவிலில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வேள்வியும் பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.



இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெங்கிடுசாமி, தண்டபாணி, ஈஸ்வரசாமி, தேவராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...