பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக நூதன பிரச்சாரம்

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம்ரூபாய் போடுவேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவேன் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிரதமர் மோடி பின்னர் எதையும் செயல்படுத்தாமல் வாயில் வெறும் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உளுந்து வடையை குவித்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பிரதமர் மோடி சொன்ன திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...