பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உடுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி அடையச் செய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் ஆலோசணை கூட்டத்தில் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான முப்பெரும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

நிகழ்வுகளில் கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம், வாழ்த்துரங்கம் நடைபெற்றது. மேலும் ஆலோசணை கூட்டத்தில் 12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் (சிறப்பாசியர்கள்) பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற்ற, வெற்றி அடையச் செய்த நிலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் 12 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வரும் ஓரே கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் கௌதமன், மாநில செயலாளர் யசோதா, மாநில பொருளாளர் வைகை பிரபா, மாநில அமைப்பு செயலாளர் குமரேசன், மாவட்ட திருப்பூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட தமிழக முழுவதும் இருந்து மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...