கோவையில் வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நாளையும், நாளை மறுநாளும் 35 டிகிரி வெப்பநிலை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) வெப்பநிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச்.4) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமை 34 டிகிரி ஆக இருந்த வெப்பம் இன்று 35 டிகிரி வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் இதே வெப்பநிலை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) வெப்பநிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 7,8 ஆகிய தேதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...