பெரியநாயக்கன்பாளையத்தில் குரங்குகள் அட்டகாசம் - நடவடிக்கை எடுக்ககோரி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நடைபாதையில் விற்பனைக்காக வைத்திருந்த வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளது. இந்த குரங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனவிலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச்.4) கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் 5-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தன.

அவை நடைபாதை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்துள்ள வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டது. இதனால் நடைபாதை வியாபாரிகளின் பொருட்கள் வீணாவுதுடன், வியாபாரமும் நஷ்டத்துக்கு உள்ளாகிறது.

எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...