சரவணம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா - மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா இன்று (மார்ச்.1) நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வருகை தந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு படிவங்கள், புத்தகங்கள மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார்.

இதேபோல அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் தபாலமுரளி, மாநகராட்சி வடக்கு மண்டலகுழு தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...