இந்தாங்க மோடி சுட்ட வடை எடுத்துக்கோங்க என கோவையில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம், கருப்பு பணம் ஒழிப்பு, மீனவர் பாதுகாப்பு, இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என வாக்குறுதிகளை அள்ளி வீசிய மோடி, அதனை காற்றில் பறக்க விட்டுவிட்டார் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள், பல்வேறு வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து, வாக்காள பெருமக்களை வாக்குக்காக வெகுவாக ஈர்க்கின்றனர்.

இந்த நிலையிலே, கோவை சாய்பாபா காலனி பகுதியில் திமுக தலைமை இட்ட உத்தரவின் அடிப்படையில், நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து பிரதமர் மோடி ஏமாற்றுகின்றார் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பிரச்சாரம் சாய்பாபா காலனி பகுதியில் வீடுகள், கடைகளில் நடத்தினார்கள்.



நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம், கருப்பு பணம் ஒழிப்பு, மீனவர் பாதுகாப்பு, இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என வாக்குறுதிகளை அள்ளி வீசிய மோடி, அதனை காற்றில் பறக்க விட்டார்.

வாயில் வடை சுடுவதாக, வாக்குறுதிகளை சொல்லிவிட்டு, அதனை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றுவதாக பிரச்சாரத்தில் ஈடுப்ட்டனர் . பாசிச ஆட்சி பாஜக ஆட்சி மோடி தலைமையில் நடப்பதாக தெரிவித்து அவர்கள் நூதன முறையில் வீடு வீடாக திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . மோடி சுட்ட வடை இந்தாங்க என தெரிவித்து, ஊட்டி விட்டு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...