உடுமலையில் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்கும் விழா- அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தொகுப்பு வீடு பராமரிப்பு செய்ய வேண்டும் என்று மாநிலம் முழுவதும் கோரிக்கை எழுந்தது அடிப்படையில், விரைவில் பராமரிப்பு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த 468 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா நடந்தது.

திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசுகையில், "நீண்ட காலமாக மலைவாழ் கிராம மக்களுக்கு பட்டா கிடைக்காமல் போராடி வந்தனர். தற்போது, உடுமலை தாலுகாவுக்குட்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு படிப்படியாக பட்டா வழங்கப்படுகிறது. கிராமத்துக்கு ரோடு வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதே போல் தொகுப்பு வீடு பராமரிப்புக்காக மாநிலம் முழுவதும் கோரிக்கை எழுந்தது அடிப்படையில், விரைவில், பராமரிப்பு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்றார்.



செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பட்டா வழங்கும் திட்டத்துக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர் என்றார்.

விழாவில், திருமூர்த்தி மலை கோடந்தூர், குருமலை, குளிப்பட்டி உட்பட பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராமத்தை சேர்ந்த, 84 பயனாளிகளுக்கு வன உரிமை பட்டாவும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 468 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை, 653 பேருக்கும் வழங்கப்பட்டது.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...