டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு - விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அழைப்பு

கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV (GROUP IV)ல் 6244 பணிக்காலியிடங்களுக்கான தேர்வானது 09.06.2024 அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 12.02.2024 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் TNPSC Group IV தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையம் வாயிலாக 09.03.2024 (சனிக்கிழமை) அன்று மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தங்களது TNPSC Group IV Application form நகலுடன் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள் நடைபெறவுள்ள இலவச மாதிரித் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மனுதாரர்கள் https://forms.gle/g8LgcvT4XjroSc1PA என்ற Google form வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும், அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு, பயனடையுமாறும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...