உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு - சாலையில் கொட்டப்படும் அவலம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.300க்கும் அதிகமாக விற்று வந்த நிலையில் தற்பொழுது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கண்ணமநாயக்கனூர், ஆண்டிய கவுண்டனூர், பாப்பான்குளம், மருள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.

இந்த பகுதிகளில் விளையும் தக்காளி பழங்களை உடுமலை தினசரி சந்தையில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரளா மாநிலம் மறையூர், மூணாறு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் தேவையை பொருத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்த நிலையில் தற்சமயம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 300க்கும் அதிகமாக விற்று வந்த நிலையில் தற்பொழுது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 150 முதல் 200 வரை விற்பனையாகிறது.



இதனால் போக்குவரத்து செலவு, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் அடைவதைவிட சாலை ஓரத்தில் வீசி எறிவது சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து தற்சமயம் உடுமலை பழனிசாலையில் பல இடங்களில் கொட்டி வருகின்றனர்.

எனவே உடுமலை பகுதி தக்காளி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தக்காளி சந்தை உருவாக்கி இருப்பு வைக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...